For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய கொடியை எரித்ததும் பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டதும் தேசவிரோதம்- நிர்மலா சீதாராமன் ஆவேசம்

நம் நாட்டின் கொடியை எரித்தவர்கள் தேச விரோதிகள் தான். அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்ற வன்முறை எதிர்பாராதது என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மாணவர் புரட்சியில் தேச விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்று தெரிவித்தார்.

சென்னை தி. நகரில் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறினார்.

Anti-social elements led to Chennai violence - Nirmala Seetharaman

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற மாணவர் புரட்சியில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டனர். தேசத்திற்காக எதிராக முழக்கமிடுபவர்கள், தேசியக்கொடியை எரிப்பவர்கள் தேச விரோதிகள்தான். இது என்னுடைய தேசம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் பதவிக்கு மதிப்பு தரவேண்டும். பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சனம் செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் தேச விரோதிகள் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த கலவரத்தை யாரும் எதிர்பார்க்காவில்லை என்றும் தெரிவித்தார்.

எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அரவணைத்து செல்கிறது. மத்திய குழுவின் அறிக்கைக்குப் பின்னர் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

English summary
National flag burnt in Marina protest, anti national slogans, against modi posters paste in Marina said Central Minister Nirmala Seetharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X