For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தியோதயா ரயில்கள் மார்ச் 1 முதல் இயக்க வாய்ப்பு : குறைந்த செலவில் இனி பயணிக்கலாம்!

பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில் அந்தியோதயா ரயில்கள் மார்ச் 1 முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தென் மாவட்ட மக்களையும், டெல்டா மாவட்ட மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    இனிமேல் நெல்லை-சென்னை செல்ல ஜஸ்ட் 200 ரூபாய் தான்..எப்படி தெரியுமா?- வீடியோ

    நெல்லை: ரயில்வே அட்டவணையில் வெளியிடப்பட்ட நெல்லை - சென்னை அந்தியோதயா ரயில்கள் வரும் மார்ச் மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தென்மாவட்ட மக்களும், டெல்டா மாவட்ட மக்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

    கும்பகோணம் ரயில் நிலைய கால அட்டவணையில் மார்ச் 1ம் தேதி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியான ரயில்வே கால அட்டவணையில் நெல்லை மாவட்டத்தை மையமாக கொண்டு சென்னைக்கு இரு அந்தியோதயா ரயில்கள் ரயில்கள் அறிவிக்கப்பட்டன.

    சாமான்ய மக்கள் பயன்படுத்தும் வகையில் இவ்விரு அந்தியோதயா ரயில்களும் முழுக்க முழுக்க முன்பதிவற்ற பெட்டிகளை கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

    வசதிகள் என்னென்ன

    வசதிகள் என்னென்ன

    நீண்ட தூரங்களுக்கு முன்பதிவு வசதியில்லாத இந்த அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல வசதிகளைக் கொண்ட இந்த ரயில் பெட்டியில் பயோ டாய்லெட், ரயிலில் குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. அழகான வடிவமைப்பு கொண்டுள்ளது.

    தாம்பரம் டூ நெல்லை

    தாம்பரம் டூ நெல்லை

    நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து 2ம் வகுப்பு சாதாரண பெட்டிகளை கொண்டு தினசரி ரயில்களாக இவை தாம்பரத்திற்கு இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவ்விரு ரயில்களுக்கான நேர அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் அந்தியோதயா ரயில், மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.

    பகல் நேர ரயில்கள்

    பகல் நேர ரயில்கள்

    மறுமார்க்கமாக சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்தியோதயா ரயில், மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு நெல்லை வந்து சேரும். செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் அதே நாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் போய் சேரும். தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் முன்பதிவற்ற ரயில் அதே நாள் இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்று அடையும்.

    கட்டண அதிகரிப்பால் கவலை

    கட்டண அதிகரிப்பால் கவலை

    பஸ் கட்டணம் உயர்ந்த நாளில் இருந்தே அந்தியோதயா ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. மேலும் இந்த ரயில்கள் வழக்கமான பாதையை தவிர்த்து டெல்டா மாவட்டங்கள் வழியாக இயக்கப்படுவதால், அப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

    200 ரூபாயில் பயணம்

    200 ரூபாயில் பயணம்

    அந்தியோதயா ரயில்கள் காமராஜர் காலத்தில் இயக்கப்பட்ட ஜனதா எக்ஸ்பிரஸ்கள் மாதிரி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். குறைந்தபட்சம் 18 பெட்டிகளை கொண்டு அந்தியோதயா எக்ஸ்பிரஸ்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையில் இருந்து சாமான்ய மக்கள் விடுபடுவர். ரூ.200க்கு நெல்லையில் இருந்து சென்னை செல்லலாம்.

    தென் மாவட்ட மக்களுக்கு நன்மை

    தென் மாவட்ட மக்களுக்கு நன்மை

    தென்மாவட்டங்களிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம், கும்பகோணம், திருநள்ளாறு என கோயில் நகரங்களுக்கு செல்லும் பல பயணிகள் செந்தூர் எக்ஸ்பிரசை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கும்பகோணத்தில் அறிவிப்பு

    கும்பகோணத்தில் அறிவிப்பு

    அந்தியோதயா ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் ஒன்றான கும்பகோணத்தில், வரும் மார்ச் 1ம் தேதி முதல் நெல்லை தாம்பரம், செங்கோட்டை தாம்பரம் அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது, டெல்டா மாவட்ட பயணிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்லை தாம்பரம் மார்க்கத்தில் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Antyodaya Express will be a long-distance, fully unreserved, superfast train service, operated on dense routes.two Antyodaya trains will be running on the Tambaram- Nellai and Senkottai - Tambaram routes soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X