For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் மணி மண்டபத்தில் 95 ஓவியங்கள், சிலிக்கன் சிலைகள்.. ஏபி ஸ்ரீதரின் கைவண்ணம்!

By Shankar
Google Oneindia Tamil News

தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய இளைஞர்களின் விடிவெள்ளி என்று அனைவராலும் கருதப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம்.

AP Sridhar honours Kalam with paintings ans silicon statues

இன்று அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கிலும் போற்றப்படுகிறது. மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

AP Sridhar honours Kalam with paintings ans silicon statues

இந்த மணிமண்டபத்தை இந்திய ஓவியர் ஏபி ஸ்ரீதர் தன்னுடைய படைப்புகளால் அழகு சேர்த்திருக்கிறார். இந்த மணிமண்டபத்தில் மொத்தம் 95 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் அப்துல் கலாமின் 2 சிலிக்கான் சிலையையும் உருவாக்கி இருக்கிறார்.

AP Sridhar honours Kalam with paintings ans silicon statues

மணிமண்டபத்தை உருவாக்க 400 பேர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் 15 பேர் கொண்ட குழுவைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் ஏபி ஸ்ரீதர். இந்த ஓவியங்களை பார்த்த முக்கிய பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டியுள்ளார்கள். மேலும் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து முகமது மீரா மரைக்காயர், ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.

AP Sridhar honours Kalam with paintings ans silicon statues

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

English summary
Popular artist AP Sridhar has sketched Abdul Kalam's 95 paintings to honour the People President on his 2nd death anniversary
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X