For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏ.பி.ஜெ அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவுதினம்: சரித்திர நாயகன் கூறிய பொன்மொழிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால் அவரது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்' என்ற பொன்னா வார்த்தைகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்.

அப்துல் கலாம் மறைந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. அப்துல் கலாம் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேஸ்வரம் அருகே, பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று மத்திய, மாநில அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

APJ Abdul Kalam's Top 15 quotes recalling the message

அப்துல் கலாம் நினைவிடத்தில், டி.ஆர்.டி.ஓ. சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதில், கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ், ஆகாஷ், பிரித்வி, தனுஷ் ஏவுகணை மாதிரிகள், மிராஜ், மிக் 2, தேஜஸ் ஆகிய போர் விமானங்களின் மாதிரிகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியை, ஆகஸ்ட் 1 வரை, பொதுமக்கள் பார்வையிடலாம்.

கலாம் நினைவு நாளையொட்டி, அவரது மூத்த அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், அவரது மகன், மகள், பேரன்கள் மற்றும் உறவினர்கள், இஸ்லாமிய முறைப்படி நேற்று அவரது நினைவிடத்தில், பிரார்த்தனை செய்தனர்.

அப்துல்கலாம் நினைவு நாளில் அவரது பொன்னான மொழிகளை நினைவு கூர்வோம்

•ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!

•ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

•சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

•இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்!

•இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

•தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

•பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

•காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

•கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

•தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

•வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு!

•அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

•வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

•அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

•வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

•தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.

•கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

•சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

English summary
Late President APJ Abdul Kalam passed away on this day, exactly a year back. His death left the entire country emotional, with people from a cross section of the society mourning his demise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X