For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா இருசக்கர வாகன திட்டம்: தகுதியுள்ள பெண்கள் யார் - என்ன தேவை?

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் யார் என அரசு அறிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்.

ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை. வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும்.

Applications called for two-wheeler scheme

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் யார் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பு :

கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..

இரு சக்கர வாகனம் 01.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

பயனாளிகளின் பணியாற்றும் தகுதி:

•நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.

•கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.

•அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

•பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள்..

வயது வரம்பு வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள்:

•தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

•அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொழில் புரிவோர், சொந்தமாக சிறுவணிகம் செய்வோர், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

•கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புரியும் மகளிர். வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

•வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை.

•மனுக்கள் பெறும் தேதி ஜனவரி 22, 2018 முதல் பிப்ரவரி 05, 2018 வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

•பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்.

கடன் வசதி:

•பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125.சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

•பிறந்த தேதிக்கான சான்றிதழ்

•இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல்

• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.

• வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.

• நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.

• ஆதார் அடையாள அட்டை.

• எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.

• பாஸ்போர்ட் அளவுள்ள புகைபடம்.

• சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.

• சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )

• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டை

• இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி.

English summary
Following the state government's decision to launch the Amma two-wheeler scheme for women on the day of her birth anniversary in February, the district administration has issued a statement inviting applications under the scheme starting from January 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X