For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆரத்தி எடுத்த மகளிர் அணி

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆரத்தி எடுத்து ஆதரவாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

Arathi's for O Panneerselvam

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இந்த பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

2019ல் நாடாளுமன்றத் தேர்தல், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில புது அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து சட்டசபைக்கு புறப்பட்டார் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம். காரில் அமர்ந்த அவருக்கு அதிமுக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்டு சிரித்த முகத்தோடு பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

கடந்த ஆண்டு சட்டசபையில் நிதியமைச்சராக ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது சாதாரண எம்எல்ஏவாக சட்டசபையில் அமர்ந்திருந்தார். இம்முறை நிதியமைச்சராக, துணை முதல்வராக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்.

English summary
Deputy Chief Minister O. Panneerselvam, who holds the 2018 -19 budget, would be presenting the State Budget for 2018-19 in the Assembly here on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X