அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி அசத்தல் வெற்றி! சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை விவரம் இதோ
கரூர்: அரவக்குறிச்சியில் 18 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, அதிமுகவின் செந்தில் பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கே.சி.பழனிச்சாமியைவிட 23673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏராளமான முகவர்கள் குவிந்ததால், முகவர்களுக்கு உட்கார இடம் இல்லை என்று கூறி தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்தை தொடர்ந்து, 45 நிமிடங்கள் தாமதமாக 8.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எனவே முதல் சுற்று முடிவு காலை 9.15 மணியளவுக்கே வெளியானது.

முதல் சுற்று நிலவரம்: அதிமுகவின் செந்தில் பாலாஜி 1495 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். செந்தில் பாலாஜி 5340 வாக்குகளும், திமுகவின் கே.சி.பழனிச்சாமி 3845 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இரண்டாவது சுற்று நிலவரம்: செந்தில்பாலாஜி 3340 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். செந்தில் பாலாஜி 10221 ஓட்டுகளும், கே.சி. பழனிச்சாமி 6881 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மூன்றாவது சுற்று நிலவரம்: செந்தில்பாலாஜி 4787 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். செந்தில் பாலாஜி பெற்றிருந்த மொத்த வாக்குகள் 16434 ஆகும். திமுகவின் கேசி பழனிச்சாமி 11647 வாக்குகள் பெற்றிருந்தார்.
நான்காவது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 5696 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். செந்தில் பாலாஜி பெற்றிருந்த மொத்த வாக்குகள் 21154 ஆகும். திமுக பெற்ற வாக்குகள் 15458 ஆகும்.
ஐந்தாவது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 7756 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம் 26980 வாக்குகளையும், பழனிச்சாமி, 19224 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
ஆறாவது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 9168 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம் 32109 வாக்குகள்; திமுகவின் கே.சி.பழனிச்சாமி 22941 வாக்குகள் பெற்றிருந்தனர்.
ஏழாவது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 10872 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம் 36980 வாக்குகளும், செந்தில்
திமுகவின் கே.சி.பழனிச்சாமி 26108 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
எட்டாவது சுற்று நிலவரம்:செந்தில் பாலாஜி 12986 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 42398 வாக்குகளும், கே.சி.பழனிச்சாமி 29412 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
ஒன்பதாவது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 14648 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 47666 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 33018 வாக்குகள் பெற்றிருந்தனர்.
பத்தாவது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 16713 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 47666 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 36556 வாக்குகள் பெற்றிருந்தனர்.
11வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 18523 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம்,58066 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 39543 வாக்குகள் பெற்றிருந்தனர்.
12வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 20213 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 62825 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 42612 வாக்குகள் பெற்றிருந்தனர்.
13வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 22482 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 67869 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 45387 வாக்குகள் பெற்றிருந்தனர்.
14வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 24211 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 72559 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 48348 வாக்குகள் பெற்றிருந்தனர்.
15வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 22190 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 75783 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 53593 வாக்குகள் பெற்றிருந்தனர்.
16வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 19568 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 78436 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 58868 வாக்குகள் பெற்றிருந்தனர்.
17வது சுற்று நிலவரம்: செந்தில் பாலாஜி 22,542 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அவர் மொத்தம், 84,727 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 62,185 வாக்குகள் பெற்றிருந்தனர்.
18வது மற்றும் இறுதி சுற்று: செந்தில் பாலாஜி மொத்தம், 88068 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 64395 வாக்குகள் பெற்றிருந்தனர். எனவே 23673 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.