For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்கு எண்ணிக்கைக்கு இடைஞ்சல்.. அரவக்குறிச்சி தொகுதி பாஜக, தேமுதிக வேட்பாளர்கள் கைது!

அவரக்குறிச்சி தொகுதியில், வாக்கு எண்ணிக்கை பணிக்கு குந்தகம் ஏற்படுத்தியதற்காக பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

கரூர்: அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏராளமான முகவர்கள் குவிந்ததால், முகவர்களுக்கு உட்கார இடம் இல்லை என்று கூறி தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்கள் போராட்டதால் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்தை தொடர்ந்து, 45 நிமிடங்கள் தாமதமாக 8.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Aravakurichi constituency BJP and DMDK candidates are arrested

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை பணிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, அத்தொகுதியின், பாஜக வேட்பாளர் பிரபு மற்றும் தேமுதிக வேட்பாளர் அரவை முத்துவை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததற்காக மொத்தம் 32 நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வேட்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Aravakurichi constituency BJP and DMDK candidates are being arrested by the police for crating problem in the counting of votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X