For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல ஐடியா.. அரியலூர் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை!

அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் போன் எடுத்து வர செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. போன் எடுத்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

Ariyalur college gives unique punishment for those who bring mobile to the classroom

ஆனாலும் சில கல்லூரிகளில் மாணவர்கள், போன் எடுத்து வரும் சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது.

அதன்படி போன் எடுத்து வரும் மாணவர்களிடம் போனை வாங்கிக் கொண்டு, 25 திருக்குறள் சொன்னால்தான் போன் கிடைக்கும் என்று விதி வைத்து இருக்கிறார்கள். பார்க்காமல் 25 திருக்குறளை மனப்பாடமாக சொன்னால் போனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஐடியா சாதாரணமாக இருந்தாலும், இந்த விதிமுறைக்கு பின் மாணவர்கள் போன் எடுத்து வருவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரிய அளவில் மாணவர்களுக்கு நலம் பயக்கும் என்பதால், இந்த தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Ariyalur Meenakshi Ramasamy college gives unique punishment for those who bring mobile to the classroom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X