For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை...மீட்புப் பணியில் ராணுவம், கடற்படை, விமானப்படை மும்முரம்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகரில் மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றன.

சென்னையில் அடித்து நொறுக்கிய பேய்மழை 40 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த கனமழை வெள்ளம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது, மீட்புப் பணிகளுக்கு நாட்டின் முப்படை உதவியையும் ஜெயலலிதா கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து முப்படையினரும் வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.

வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியோரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். தாம்பரம் ஊரப்பாக்கம் பகுதியில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சிக்கியவர்களை 2 பட்டாலியன் ராணுவத்தினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தாம்பரம் முடிச்சூர் பகுதியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றன. மேலும் பெங்களூர், புவனேஷ்வர், பாட்னாவில் இருந்தும் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் பிற மாநில ராணுவத்தினர் வருகை தாமதமாகி உள்ளது. தொடர்ந்தும் முப்படையினரும் சென்னை வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Non-stop torrential rains pounded several parts of Chennai and its suburbs as army and navy were deployed in suburban areas to undertake rescue on a war footing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X