For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆரோக்கியா பால், தயிர் இனி லிட்டருக்கு ரூ.2 கம்மி - ஆனாலும் ஆவினை விட அதிகம்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆரோக்கியா நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூபாய் 2 குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் டோட்லா டெய்ரி, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், ஆரோக்யா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் ஆரோக்யா தவிர்த்து மற்ற நான்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவை.

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட ஆவின் பாலுக்கு பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் ஆகிய 4 நிறுவனங்களின் பால் விலை குறைக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்யா நிறுவனம் மட்டும் பால் விலையை குறைக்கவில்லை. இந்த நிலையில், ஆரோக்யா நிறுவனம் பால், தயிர் விலையை லிட்டருக்கு ரூபாய் 2 திடீரென குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது, செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Arokya milk rate reduced in TN

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி, "தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்யா பால் நிறுவனம், செவ்வாய்க்கிழமை முதல் லிட்டருக்கு ரூபாய் 2 விலையை குறைத்துள்ளது. இது வெறும் கண் துடைப்பு நாடகமாகும்.

பெட்ரோல், டீசல், மூலப்பொருள்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் லிட்டருக்கு ரூபாய் 12 வரை விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

தற்போது பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விற்பனை விலையை லிட்டருக்கு வெறும் ரூபாய் 2 மட்டுமே குறைத்துள்ளன. அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், லிட்டருக்கு ரூபாய் 6 முதல் ரூபாய் 8 வரை விற்பனை விலையை குறைக்க வேண்டும். அதே போல ஆவின் நிறுவனமும் பால் விலையை, மேலும் குறைத்து பால் கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு முன் வர வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலை விற்பனை செய்யும் பால் முகவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கமிஷனை வழங்க வேண்டும். அவற்றை சதவீத அடிப்படையில் நிர்ணயம் செய்து தருவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தில் மொத்த விநியோகஸ்தர்கள் எனப்படும் இடைத் தரகர்களை முற்றிலும் நீக்கி விட்டு, பால் முகவர்களுக்கு நேரிடையான வர்த்தகத் தொடர்புகளைத் தர வேண்டும்" என்றார் அவர்.

தனியார் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 2 குறைத்தாலும், ஆவின் பால் விலையை விட லிட்டருக்கு ரூபாய் 3 முதல் ரூபாய் 4 வரை கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூபாய் 46ல் இருந்து, ரூபாய் 44 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூபாய் 42ல் இருந்து ரூபாய் 40 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டருக்கு ரூபாய் 50ல் இருந்து ரூபாய் 48 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

English summary
Arokya dairy reduced its milk and curd rate for 2 rupees in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X