For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணைக் கவரும் ஓவியங்கள்.. கலகலக்கும் ஊட்டி கண்காட்சி.. சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

ஊட்டியில் துவங்கியுள்ள ஓவிய கண்காட்சியை சுற்றுலாபயணிகள் ரசித்து செல்கின்றனர்,.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊட்டியில் அரிய படைப்புகள் அடங்கிய ஓவிய கண்காட்சி-வீடியோ

    ஊட்டி: ஊட்டியில் அரிய படைப்புகள் அடங்கிய ஓவிய கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    தொன்மை வாய்ந்த பழங்குடியினர் கலைகளை பேணி காப்பதோடு, அக்கலையில் ஈடுட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கோடை விழாவினை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான கண்காட்சி நேற்று பேரார் பகுதியில் அமைந்துள்ள மெக்கன்ஸி கட்டிடகலை கல்லூரி சார்பில் நடைபெற்றது.

    Art exhibition in Ooty

    இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை மெக்கன்ஸ் கல்லூரி தாளாளர் முரளி குமாரன் முன்னிலையில் தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலர் கண்ணன் திறந்து வைத்தார்.

    இந்த கண்காட்சியில் பழமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியங்கள், அண்மை கால ஓவியங்கள், பல்வேறு கடவுள் திருவுருவங்கள், தலைவர்களின் ஓவியங்கள், இயற்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் உட்பட பல தரப்பட்ட ஓவியங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தர் இன பழங்குடி மக்கள் மண் பாண்டம் செய்வது, தோடர் இன. பழங்குடி மக்களின் பூத்து குளி போர்வைகள் உட்பட பல தரப் பட்ட அரிய படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

    கோடை விழாவையை ஒட்டி உதகமண்டலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 4-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

    English summary
    The art exhibition has been started. There are many tourists visiting this place. It has a number of paintings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X