For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லோரும் போட்டனர் டிராமா.. எதுவுமே எங்க கிட்ட எடுபடலை ஆமா.. ஆர்த்தி ஆஹா பேச்சு!

Google Oneindia Tamil News

பண்ருட்டி: சட்டசபைத் தேர்தலின்போது எல்லோரும் மக்களிடம் டிராமா போட்டனர். ஆனால் யார் டிராமாவும் எடுபடவில்லை. அம்மதான் மீண்டும் வென்றார், 6வது முறையாக அரியணை ஏறினார் என்று கூறியுள்ளார் நடிகையும், அதிமுக பேச்சாளருமான ஆர்த்தி.

பண்ருட்டியில் நடந்த அதிமுக பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

Arthi slams opposition parties for disturbing the assembly session
சட்டசபை தேர்தல் கடவுள் தந்த சந்தர்ப்பம். எல்லோரும் மக்களிடம் டிராமா போட்டனர். யார் டிராமாவும் எடுபடவில்லை. 6-வது முறையாக ஜெயலலிதா அரியணை ஏறினார். புரட்சி தலைவி மீண்டும் முதல்வரானார். இந்த ஐந்தாண்டு மிகவும் முக்கியமானது.

கழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் தந்த வள்ளல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டில்தான் கொண்டாட உள்ளோம். ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நமது முதல்வரை பாராட்டாமல் தினமும் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்கின்றனர்.

தமிழக மக்களுக்கு நன்மை செய்வது எதிர் கட்சிகள் நோக்கம் இல்லை. தினமும் ஏதாவது அமளி, துமளி செய்து வெளியே வந்து விட வேண்டும் என்று செயல்படுகின்றனர். பொறுப்பேற்ற மறு நாளில் மக்களுக்கு யோசித்து நல்ல பட்ஜெட் வழங்கி உள்ளார்.

ஏழைகளுக்கு 10 லட்சம் வீடு, மாற்று திறனாளிகளுக்கு 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி மகளிர் விவசாயிகள் இப்படி பலதரபட்ட மக்களின் நலன் கருதி நல்ல நிதிநிலை அறிக்கை தந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி தொடர வேண்டும் என்றார் ஆர்த்தி..

English summary
Actress Arthi has slammed the state opposition parties for disturbing the assembly session
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X