For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் கில்லாடி ஆறுமுகம்... திடுக் தகவல்!

கோவை கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: கோவை கல்லூரியில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவி லோகேஷ்வரியை பிடித்து தள்ளிய பயிற்சியாளர் ஆறுமுகம் போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் வல்லவர் என்று தெரியவந்துள்ளது. இது வரை கடந்த 6 ஆண்டுகளில் 1200 முகாம்கள் நடத்தி போலி சான்றிதழை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார் ஆறுமுகம்

Newest First Oldest First
5:28 PM, 14 Jul

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து

10 சிறுவர்கள் உட்பட 40 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்

5:23 PM, 14 Jul

கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு

இரவில் இன்னும் கூடுதலாக நீர் திறக்கப்பட வாய்ப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் அணை நிரம்பியது

5:04 PM, 14 Jul

பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு 27ம் தேதிவரை நீதிமன்ற காவல்

கோவை கல்லூரியில் மாணவி மரணமடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டார் ஆறுமுகம்

4:34 PM, 14 Jul

சாத்தூர் அருகே ஆசிரியர் பயிற்சி மாணவியை கொன்று சட்ட கல்லூரி மாணவர் தற்கொலை

மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து மாணவர் மதன் தற்கொலை

4:06 PM, 14 Jul

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
3:07 PM, 14 Jul

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

2:12 PM, 14 Jul

மாநிலங்களவைக்கு 4 எம்பிக்கள் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார் ஜனாதிபதி

சச்சின், நடிகை ரேகா, அனு ஆகா, கே.பராசரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது

விவசாயிகள் சங்கத் தலைவர் ராம் ஷகல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா ஆகியோர் எம்பிக்களாக நியமனம்

சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, நடனக் கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோர் நியமனம்

1:36 PM, 14 Jul

கேஆர்எஸ் அணையிலிருந்து 20,000 கன அடி நீர் திறப்பு
1:13 PM, 14 Jul

மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியைத் தாண்டியது
12:22 PM, 14 Jul

கர்நாடகாவில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கே.ஆர்.எஸ் அணை நிரம்பி வருவதால் தண்ணீர் வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கை

12:09 PM, 14 Jul

திருப்பதி கோயிலில் 9 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை

ஆக. 9 முதல் 17ம் தேதிவரை தரிசனத்திற்கு அனுமதியில்லை

11:58 AM, 14 Jul

ஜிஎஸ்டி மூலம் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தம் - தமிழிசை

தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் - தமிழிசை

திமுக - காங். கூட்டணி கொண்டு வராத திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்

அதிமுகவுடன் கூட்டணி இல்லாத நிலையிலும் கொண்டு வந்துள்ளோம் - தமிழிசை

மத்திய, மாநில அரசுகளிடையே சுமூக நிலை இருந்தால்தான் நல்லது நடக்கும் - தமிழிசை

11:34 AM, 14 Jul

கோவை கல்லூரியில் மாணவியை தள்ளிவிட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரிப்பதில் ஆறுமுகம் வல்லவர்

கடந்த 6 ஆண்டுகளில் 1200 முகாம்கள் நடத்தி போலி சான்றிதழை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார் ஆறுமுகம்

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என்று கூறிக் கொண்டுள்ளார் ஆறுமுகம்

9:13 AM, 14 Jul

சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குநர் கவுதமன் விடுதலை

உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து கவுதமன் வெளியே வந்தார்

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார் கவுதமன்

9:13 AM, 14 Jul

சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குநர் கவுதமன் விடுதலை

உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து கவுதமன் வெளியே வந்தார்

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார் கவுதமன்

8:46 AM, 14 Jul

80 அடியை நெருங்குகிறது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 79.45 அடியாக உள்ளது

8:46 AM, 14 Jul

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றார் டிரம்ப்

ட்ரம்புக்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு

8:46 AM, 14 Jul

பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 100 தாண்டியது

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் இரட்டை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன

குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்

8:45 AM, 14 Jul

கோவை மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

மாணவி உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவர் கைது

English summary
Here are the Tamilnadu today Flash news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X