For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு...பிப்.12-இல் மீண்டும் தொடக்கம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் தனது விசாரணையை நாளை முதல் 15 நாட்களுக்கு ஒத்தி வைக்த்துள்ளது. இந்த விசாரணை மீண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழக சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.

    Arumugasamy Commission adjourns inquire for 15 days

    இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார், இதுவரை விசாரணை நடத்தியவர்களிடம் தங்கள் தரப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை சசி தரப்பு முன் வைத்தது.

    அதை ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை விசாரணை ஆணையம் பெற்ற 22 பேரின் விவரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

    அதேபோல் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டது. சசிகலா தரப்பு இந்த 22 பேரிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் முடிந்த பிறகு, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆறுமுகசாமி தனது விசாரணையை மீண்டும் தொடங்குவார்.

    அன்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்ப னுக்கும், பிப்.15-ஆம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    English summary
    Arumugasamy commission adjourns its enquiry for 15 dayd from tomorrow. It also sends inquiry details from whom it get from 22 which sends to Sasikala through speed post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X