For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணம்: ஓபிஎஸ், தம்பிதுரைக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. இதன் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Arumugasamy commission plans to send summon to OPS

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு சம்மன் அனுப்புவதற்கு ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தவும் ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Arumugasamy commission plans to send summon to O.Panneer Selvam and London Doctor Richard Peale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X