For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்திக்கு ஜூன்28 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தமிழக அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

Arumugasamy commission summoned to Tugluk editor Gurumurthy

இந்நிலையில், பாஜக ஆதரவாளரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான குருமூர்த்தி வருகிற ஜூன் 28 ஆம் தேதி விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ஜூன் 25 ஆம் தேதி மருத்துவர் சிவக்குமார், ஜூன் 26 ஆம் தேதி மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Former chief minister of Tamilnadu Jayalalitha’s death probing commission justice Arumugasamay probe commission summoned to appear to editor Gurumuruthy of Tuglak magazine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X