For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2018: ரயில்களில் வைஃபை, சிசிடிவி கேமரா - பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டி தொழிற்சாலை

அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள் - பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டி தொழிற்சாலை- வீடியோ

    சென்னை: பெரம்பூரில் அதி நவீன ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும், ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

    2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வே துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    Arun Jaitley big budgetary allocations for railways

    ரயில்வே துறையில் ரூ.1,48,528 கோடி முதலீடு செய்யப்படும். 12,000 ரயில் வாகன்கள் மற்றும் 5,160 ரயில்பெட்டிகள் வாங்கப்படும். மேலும் ரயில் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

    600 பெரிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ரயில்வே துறையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.

    4000க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமனம் செய்யப்படும். ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

    25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கேலெட்டர் வசதி செய்து தரப்படும். ரயில் நிலையங்களில் வைபை வசதி மேம்படுத்தப்படும். 3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே வழிதடங்கள் மேம்படுத்தப்படும். பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும் என்றும் நிதிமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    English summary
    12,000 wagons, 5,160 coaches and 700 locomotives being procured. There is significant achievements of physical targets by the railways, Jaitley say
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X