For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருப்புகோட்டை வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.

அருப்புக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது. இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள்.

Aruppukkottai IT raid: It is just a usual raid, dont mix CM with the raid says, Minister Jayakumar

இதுவரை அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 170 கோடி ரொக்கம், 120 கிலோ தாகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சோதனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இந்த சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.

அதில், வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான். முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வந்தால் சோதனை செய்வது வழக்கம். இது அரசுக்கு எதிரான நடவடிக்கை கிடையாது.

சோதனையில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.வருமான வரி சோதனையில் அரசை தொடர்புபடுத்தி பேசுவது தவறு. அரசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

முதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. முதல்வரின் உறவினர் வீடுகள் எங்கேயும் சோதனை நடக்கவில்லை. முதல்வரின் உறவினர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Aruppukkottai IT raid: It is just a usual raid, don't mix CM with the raid says, Minister Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X