For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னிடம் வருமான வரி சோதனை நடக்கவில்லை.. தீயாக பரவிய செய்திகளுக்கு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் மறுப்பு

அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை குறித்து தன்னிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை குறித்து தன்னிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கிறார்.

அருக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Aruppukkottai IT raid: No one has investigated me yet says contractor Subramaniyam

இதுவரை அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் சோதனை நடக்கிறது. இந்த சோதனையில் 180 கோடி ரொக்கம், 120 கிலோ தாகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சோதனை தொடர்பாக ஒப்பந்ததாரர் சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் எஸ்பிகே நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த செய்திக்கு ஒப்பந்ததாரர் சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என்றுள்ளார். வருமான வரித்துறை விசாரித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றுள்ளார். தன்னை அதிகாரிகள் யாரும் விசாரிக்கவில்லை என்றும் ஒப்பந்ததாரர் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Aruppukkottai IT raid: No one has investigated me yet says contractor Subramaniyam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X