For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருப்புக்கோட்டையில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை.. மீண்டும் தொடங்கிய ஆய்வு

அருப்புக்கோட்டையில் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அருப்புக்கோட்டையில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறையின் ஆய்வு- வீடியோ

    விருதுநகர்: அருப்புக்கோட்டையில் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

    ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது.

    Aruppukkottai IT raid: Operation Parking Money resumes for the third day

    இந்த சோதனை குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. இதுவரை 100 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 160 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

    நேற்று மாலையோடு இந்த சோதனை முடிவதாக கூறப்பட்டது. ஆனால் இன்று மதியம் மீண்டும் சோதனை தொடங்கி இருக்கிறது. அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து நடத்தும் எஸ்பிகே என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் செய்த சில பணிகளில், முறைகேடுகள் செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்த இந்த சோதனை நடக்கிறது.

    நேற்று சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று இன்னும் சில முக்கியமா ஆவணங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடக்கிறது.

    English summary
    Aruppukkottai IT raid: Operation Parking Money resumes for the third day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X