விபத்தால் கார் இப்படி எரியாதே.. சந்தேகம் கிளப்பும் நிபுணர்கள்.. அஸ்வின் மரணத்தில் தொடரும் மர்மம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே கார் விபத்தில் உயிரிழந்த அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி நிவேதாவும் தேனிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு செல்வதாக திட்டமிட்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே கடந்த சனிக்கிழமை அதிகாலையில் வேகமாக வந்த சொகுசுகார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் மரணமடைந்தனர்.

மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ள பிஎம்டபிள்யூ காரில் 4 ஏர்பேக்குகள் உள்ள நிலையில் கார் தீப்பிடித்து எரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. காரை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு
ஓடி, மரத்தில் மோதியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

கார் பந்தய வீரர்

கார் பந்தய வீரர்

அஸ்வின் கார் பந்தய வீரர் என்பதால் அவரால் காரை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் அவரது மனைவி மருத்துவக் கல்லூரி மாணவியாவார்.

தப்பிக்க முயற்சி

தப்பிக்க முயற்சி

கார் தீப்பிடித்து எரிந்தவுடன் இருவரும் கண்டிப்பாக தப்பிப்பதற்கான வழிகளை ஆராய்ந்திருப்பர். ஆனால் அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. கார் தீப்பிடித்து எரியும் போது 20 அடி தூரத்திற்கு யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தீயின் தாக்கம் இருந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

உருக்குலைந்த கார்

உருக்குலைந்த கார்

கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் உள்ளதால் அதன் எரிந்த பாகங்களை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளனர். ஒரு கார் தீப்பிடித்து எரிந்தாலும் இந்த அளவுக்கு கொழுந்து விட்டு எரிய வாய்ப்பில்லை என்கின்றனர்.

அஸ்வின் யார்?

அஸ்வின் யார்?

அஸ்வின் சுந்தரின் தந்தை சண்முகசுந்தர். வேலூரில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் லதா, காட்பாடி பஞ்சாயத்து முன்னாள் தலைவராவார். இவர்களது ஒரே மகன் அஸ்வின் சுந்தர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிவேதாவின் பெற்றோர் கொழும்பில் வசித்து வருகின்றனர்.

மருத்துவ படிப்புக்காக...

மருத்துவ படிப்புக்காக...

சென்னையில் மருத்துவம் படிப்பதற்காக வந்த நிவேதாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் அஸ்வின் சந்தித்தார். அதுமுதலே நிவேதாவை அஸ்வினுக்கு பிடித்து விடவே தனது காதலை அவரிடம் அஸ்வின் கூறியுள்ளார். அதற்கு நிவேதாவும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

கல்யாணம்

கல்யாணம்

இந்நிலையில் கடந்த ஆண்டு காதல் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் தேனிலவுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த அவர்களது வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னரே முடிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

திட்டமிட்ட கொலையா

திட்டமிட்ட கொலையா

தொழில்முறை கார் பந்தய வீரரான அஸ்வின் சுந்தருக்கு தொழில் ரிதியான போட்டி இருந்திருக்கலாம் என்று கோணத்திலும் முன்விரோதம் ஏதேனும் இருந்திருக்கலாம் என்று கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Car racer Ashwin Sundar and his wife Nivetha were planned to go to abroad for honeymoon celebrations, but before that their life ended.
Please Wait while comments are loading...