For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏக்களின் சொத்து 5 வருடத்தில் 'டபுள்' ஆகியுள்ளதாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏக்களின் சொத்து கடந்த ஐந்து வருடங்களில் இரட்டிப்பாகியுள்ளதாக ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளன. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏக்களின் சொத்துக்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாதான் முன்னோடி

ஜெயலலிதாதான் முன்னோடி

இதில் முதல்வர் ஜெயலலிதாதான் முதல் ஆளாக இருக்கிறார். அவரது சொத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 62 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாம்.

சராசரியாக ரூ. 8.63 கோடி உயர்வு

சராசரியாக ரூ. 8.63 கோடி உயர்வு

கடந்த 2011 தேர்தலின்போது மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து உயர்வானது ரூ. 4.35 கோடியாக இருந்தது. இப்போது இது ரூ. 8.63 கோடியாக எகிறியுள்ளது. அதாவது 98 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள்

ஜெயலலிதாவின் சொத்துக்கள்

ஜெயலலிதாவின் சொத்து 2011 தேர்தலின்போது ரூ. 51 கோடி அளவுக்கு இருந்தது. இது தற்போது ரூ 62 கோடி உயர்ந்து ரூ. 113 கோடியாக எகிறியுள்ளது.

கருணாநிதியின் சொத்துக்கள்

கருணாநிதியின் சொத்துக்கள்

திமுக தலைவர் கருணாநிதிக்கு 2011 தேர்தலில் ரூ. 44 கோடி அளவிலான சொத்துக்கள் இருந்தன. இது தற்போது ரூ 18 கோடி அதிகரித்து ரூ. 62 கோடியாக உயரந்துள்ளது.

சரத்குமார்

சரத்குமார்

சரத்குமாரின் சொத்து மதிப்பு 2011 தேர்தலில் ரூ. 27 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 64 கோடியாக அதிகரித்துள்ளது.

51 அதிமுக எம்எல்ஏக்களின் சொத்துக்கள்

51 அதிமுக எம்எல்ஏக்களின் சொத்துக்கள்

அதிமுகவைச் சேர்ந்த 51 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து உயர்வானது ரூ. 4 கோடியாக உள்ளது. 16 திமுக எம்.எல்.ஏக்களின் சொத்து உயர்வு ரூ. 5 கோடியாக உள்ளது.

அடேங்கப்பா தேமுதிக

அடேங்கப்பா தேமுதிக

பெரிய கட்சிகள் வரிசையில் பார்த்தால் தேமுதிகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களின் சொத்துக்கள் சராசரியாக ரூ. 2 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளன. இதன் மூலம் இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் "சம்பாதித்துள்ளனர்" என்பதை உணர முடிகிறது. காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ. 3 கோடி அளவுக்கு சொத்து உயர்ந்துள்ளது. பாமகவில் 2 பேருக்கு ரூ. 1 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நான்கு சிபிஐ எம்எல்ஏக்களுக்கு ரூ. 27 லட்சமும், நான்கு சிபிஎம் எம்எல்ஏக்களுக்கு ரூ. 15 லட்சமும் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது..

English summary
Assets of 89 recontesting MLAs have doubled in 5 years, according to a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X