For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை ஏன் ஆத்தூரில் விசாரணை செய்ய வேண்டும்... ஆறுகுட்டி எம்.எல்.ஏ கேள்வி - வீடியோ

ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ் கொலை வழக்கில் என்னை ஆத்தூரில் வைத்து விசாரணை செய்தது அரசியல் உள்நோக்கம்கொண்டது என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஆறுகுட்டி கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஆத்தூர்: ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ் கொலை வழக்கில் தம்மை ஆத்தூருக்கு வரவழைத்து விசாரணை செய்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஆறுகுட்டி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

 Athur police should have inquired me at kodanadu or kovai said Aarukutty MLA

அந்த வழக்கை விசாரித்து வரும் ஆத்தூர் போலீசார் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டியை ஆத்தூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆறுகுட்டி விசாரணைக்கு ஆஜரானார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆறுகுட்டி,'' என்னை கொடநாட்டிலோ அல்லது கோவையிலோ வைத்து விசாரணை செய்திருக்கலாம். ஆனால் ஆத்தூர் வரவழைத்து விசாரணை செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது'' என்றார். மரணமடைந்த கனகராஜ், ஆறுகுட்டியிடமும் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Athur police should have inquired me at kodanadu or kovai. Inquiring at Athur is politically motivated said MLA Aarukutty
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X