For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகனை மிதித்து கொன்ற யானை.. சமயபுரம் கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகளுக்குப் பின் நடைதிறப்பு

சமயபுரம் கோவிலில் யானை மசினி பாகனை மிதித்து கொன்றதை தொடர்ந்து இன்று பரிகார பூஜைகளுக்குப் பின் நடை திறக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்

    திருச்சி: சமயபுரம் கோவிலில் யானை மசினி பாகனை மிதித்து கொன்றதை தொடர்ந்து இன்று பரிகார பூஜைகளுக்குப் பின் நடை திறக்கப்பட்டது.

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். காலை 9 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கோவிலுக்குள் நின்று கொண்டிருந்த கோவில் யானை மசினி திடீரென கோபமடைந்தது.

    ஆசி வாங்க வந்த பக்தர்களை தள்ளி விட்டதுடன் ஆவேசமாக பிளிறியது. அப்போது அங்குசத்தால் குத்தி கட்டுப்படுத்த முயன்ற 47 வயதான பாகன் கஜேந்திரனை யானை மசினி துதிக்கையால் காலுக்குள் தள்ளி நெஞ்சில் மிதித்து கொன்றது.

    வைரலான வீடியோ

    வைரலான வீடியோ

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சோக சம்பவத்தை செல்போன்கள் மூலம் வீடியோ எடுத்தனர். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கொட்டகையில் அடைப்பு

    கொட்டகையில் அடைப்பு

    பாகன் கஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. யானை மசினி கோவில் வளாகத்தில் இருந்து நேற்று இரவு வெளியேற்றப்பட்டு சமயபுரம் அருகில் உள்ள மாகாளிக்குடி கொட்டகைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டது.

    சிறப்பு பரிகார பூஜை

    சிறப்பு பரிகார பூஜை

    சமயபுரம் கோவிலுக்குள் பாகன் யானையால் மிதித்து கொல்லப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோவிலில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் மூலம் சிறப்பு பரிகார பூஜை நடத்தினர்.

    பூசணியில் சூடம் ஏற்றி

    பூசணியில் சூடம் ஏற்றி

    கோவில் முழுவதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. கோவிலின் முக்கிய வாசல், மற்றும் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 4 வாசல்களிலும் கோலம் போடப்பட்டு, தேங்காய், அரிசி, பழங்கள், பூக்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிறகு பூசணியில் சூடம் ஏற்றி உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது.

    4 முக்குகளிலும் பூஜை

    4 முக்குகளிலும் பூஜை

    காலை 7 மணி முதல் இந்த பூஜைகள் நடைபெற்றன. வாசல்கள் தவிர கோவிலின் 4 முக்கு பகுதிகளிலும் இதே போன்று பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளும் பூஜைகள் நடந்தது.

    பக்தர்களுக்கு அனுமதி

    பக்தர்களுக்கு அனுமதி

    அதன் பிறகு 10 மணிக்கு மேல் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர்.

    பக்தர்கள் அனுமதிக்கவில்லை

    பக்தர்கள் அனுமதிக்கவில்லை

    கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் மாகாளிக்குடி சென்று அங்கு கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யானை மசினியையும் பார்க்க சென்றனர். ஆனால் பாதுகாப்பு கருதி யானை அருகில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கவில்லை.

    கேமிராக்கள் ஆய்வு

    கேமிராக்கள் ஆய்வு

    இதற்கிடையே யானை மசினிக்கு திடீரென கோபம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுவதால் கோவில் வளாகத்தில் உள்ள கேமிராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

    English summary
    Atonement poojas have been done in Trichy Samayapuram temple. Samyapuram temple elephant Masini killed Mahout Kajendiran yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X