For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தை தெறிக்க விட்ட படேல்... கூகுளை உயர்த்தி வைக்க வந்த சுந்தர்.. அதிரடி ஆகஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம்தான் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அளவிலான பரபரப்பு. தமிழகத்தைப் பொறுத்தவரை வைகோவின் வயது முதிர்ந்த தாயார் நடத்திய மது விலக்கு கோரிய போராட்டம்.

சர்வதேச அளவில் கூகுளின் தலைமை செயல்அதிகாரியாக சென்னையில் பிறந்தவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் உயிருடன் பிடித்தது இன்னொரு பரபரப்பு சம்பவம்.

வைகோவின் தாயார் போராட்டம்

வைகோவின் தாயார் போராட்டம்

ஆகஸ்ட் 1ம் தேதி கலிங்கப்பட்டியில் நடந்த மது விலக்கு கோரி நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் கலந்து கொண்டார்.

25 எம்.பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

25 எம்.பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

ஆகஸ்ட் 3ம் தேதி நாடாளுன்றத்தில் அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எதிராக போராட்டம் நடத்திய 25 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சவுதாலாவுக்கு 10 வருடம் சிறை

சவுதாலாவுக்கு 10 வருடம் சிறை

ஆகஸ்ட் 3ம் தேதி, ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோருக்கு முறைகேடு வழக்கில் 10 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

உயிருடன் சிக்கிய பாக். தீவிரவாதி

உயிருடன் சிக்கிய பாக். தீவிரவாதி

ஆகஸ்ட் 5ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிராதி முகம்மது நவேத் என்பவரை ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டபோது மக்களின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். கஸாப்புக்குப் பிறகு, இந்தியாவில் உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி நவேத் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 27ம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் சஜ்ஜத் என்ற அபு உபதுல்லா என்ற இன்னொரு தீவிரவாதியையும் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர்.

ஜெ.வைப் பார்த்த மோடி

ஜெ.வைப் பார்த்த மோடி

ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை அவரது வீடு தேடிச் சென்று பார்த்தார்.

உயிர் நீப்பது குற்றம்

உயிர் நீப்பது குற்றம்

ஆகஸ்ட் 10ம் தேதி, ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீப்பது தற்கொலைக்குச் சமம். அது சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

ஆகஸ்ட் 11ம் தேதி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

இயக்குநர் வி.சேகர் அதிரடி கைது

இயக்குநர் வி.சேகர் அதிரடி கைது

ஆகஸ்ட் 12ம் தேதி, கோவில் சிலை திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக பிரபல தி்ரைப்பட இயக்குநர் வி.சேகரம் கைது செய்யப்பட்டார்.

மேகிக்குத் தடை நீங்கியது

மேகிக்குத் தடை நீங்கியது

ஆகஸ்ட் 13ம் தேதி மும்பை உயர்நீதி்மன்றம், மேகி நூடுல்ஸுக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது. அதேசமயம், புதிய சோதனைக்கும் அது உத்தரவிட்டது.

தாய்லாந்து குண்டுவெடிப்பு

தாய்லாந்து குண்டுவெடிப்பு

ஆகஸ்ட் 17ம் தேதி தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள எரவான் இந்து ஆலய வளாகத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். துருக்கியைச் சேர்ந்த ஆடம் கரடாக் என்பவர் மனித வெடிகுண்டாக வந்து இந்தத் தாக்குதலை நடத்தினார்.

மீண்டும் ரனில்

மீண்டும் ரனில்

ஆகஸ்ட் 17ம் தேதி இலங்கையில் மீண்டும் பிரதமராக ரனில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

பல்மைரா தரைமட்டம்

பல்மைரா தரைமட்டம்

ஆகஸ்ட் 24ம் தேதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிரியாவின் பல்மைரா நகரின் பால்ஸாமின் கோவில் மற்றும் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொன்மையான நாகரீக சின்னங்களையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அழித்தனர்.

குஜராத்தில் வெடித்த கலவரம்

குஜராத்தில் வெடித்த கலவரம்

ஆகஸ்ட் 26ம் தேதி படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. 8 பேர் கொல்லப்பட்டனர். ஹர்திக் படேல் தலைமையிலான போராட்டம் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
This August saw the elevation of Sundar Pichai as the new CEO of Google and In India, Patels enacted a big protest in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X