For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exclusive: எனக்கு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பாஜகதான் முழு பொறுப்பு- ஆட்டோ ஓட்டுநர் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்- வீடியோ

    சென்னை: எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் பாஜகதான் என்று அக்கட்சியினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிர் பரபரப்பு பேட்டி அளித்தார்.

    சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தெருகூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.

    அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ டிரைவர் கதிர் கேள்வி எழுப்பிய போது நமட்டு சிரிப்பு சிரித்தார் தமிழிசை. இதையடுத்து குண்டர்கள் கதிரை பிடித்து நெம்பி தள்ளி கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நண்பர்களுடன்

    நண்பர்களுடன்

    இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கதிர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில் நான் ஆட்டோ ஓட்டும் தொழிலை கடந்த 23 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை சைதாப்பேட்டையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி தெருகூத்தில் நண்பர்களுடன் கலந்து கொண்டேன்.

    குண்டுகட்டாக

    குண்டுகட்டாக

    அப்போது அந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விவரித்தார். அப்போது நான் அவரிடம் சென்று "அம்மா பாஜக நல்லாட்சி வழங்குவதாக கூறுகிறீர்கள், ஆனால் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது" என்று பேசிக் கொண்டிருந்த போதே பாஜக கட்சி நிர்வாகிகள் என்னை குண்டுகட்டாக தூக்கி கொண்டு தாக்கினர்.

    மிரட்டல் இல்லை

    மிரட்டல் இல்லை

    என்னை போலீஸார் பாதுகாப்பாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நான் சாதாரண தொழிலாளி. நான் ஆட்டோ ஓட்டினால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும். எனக்கு இதுவரை எந்தவித மிரட்டலும் வரவில்லை.

    புகார் அளிக்கவில்லை

    புகார் அளிக்கவில்லை

    எனினும் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பாஜகவினர்தான் காரணம் என்பதை இந்த மீடியா மூலம் தெரிவித்து கொள்கிறேன். நான் இதுவரை எந்த புகாரையும் அளிக்கவில்லை என்றார் கதிர்.

    English summary
    Auto Driver Kathir says that he is afraid of being threaten by BJP. If any abnormalities happened for him, then BJP should be responsible for it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X