For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணியின் நகை, பணத்தை திருப்பிக் கொடுத்த நேர்மையான ஆட்டோ டிரைவர் – போலீசார் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவில் பெண்மணி ஒருவர் விட்டுச் சென்ற 40 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கத்தை போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையாக ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பீர்க்கங்கரணையை சேர்ந்தவர் நிலோபர். இவர் ஒரு டிராவல்ஸ் பேருந்துல் திருச்சிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். பெருங்களத்தூரில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் பீர்க்கங்கரணைக்கு சென்றார்.

Auto driver surrender jewel and money missed by passenger…

பையைத் தவறவிட்ட பெண்மணி:

அப்போது நிலோபர் தான் சென்ற ஆட்டோவில் ஒரு பையை தவற விட்டார். அதில் 40 பவுன் நகை, ரூபாய் 2ž லட்சம் ரொக்கப்பணம் இருந்தது.

போலீசில் புகார்:

இதையடுத்து நிலோபர் பீர்க்கங்கணை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். போலீசார் அவரிடம் ஆட்டோவில் எங்கு ஏறினீர்கள், எங்கு போய் இறங்கினீர்கள்?என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்:

அப்போது பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்துக்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த டிரைவர் போலீஸ் நிலையத்துக்குள் சென்று தனது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் இந்த பையை தவற விட்டு விட்டார் என்று கூறி ஒரு பையை போலீசாரிடம் கொடுத்தார்.

ஆட்டோ டிரைவரின் நேர்மை:

அந்த பையில் நிலோபர் தவறவிட்ட 40 பவுன் நகை, ரூபாய் 2ž லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசார் பாராட்டினார்கள். நகை, பணத்தை நிலோபரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் கண்ணன் (வயது 41) என்றும், பெருங்களத்தூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

பாராட்டிய கமிஷனர்:

ஆட்டோ டிரைவர் கண்ணனை இன்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

English summary
Auto driver rescue and surrender the jewels and 2 lakhs money which was missed by the passenger in auto in police station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X