For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழலை ஒழியுங்கள்.. இல்லாவிடில் ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பி.எஸ் பெயரை சூட்டிவிடுங்கள்! ராமதாஸ் நக்கல்!

ஊழலை ஒழியுங்கள் இல்லையெனில் நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதா எடப்பாடி, ஓபிஎஸ் பெயரை சூட்டிவிடுங்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஊழலை ஒழியுங்கள் இல்லையெனில் நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதா எடப்பாடி, ஓபிஎஸ் பெயரை சூட்டிவிடுங்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.

Avoid corruption otherwise keep names of Jayalalitha. Edappadi and OPS: Ramadoss

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து துணைவேந்தர் கணபதியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பல்கழைக் கழக துணைவேந்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் 'லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது. ஊழல் துணைவேந்தரின் தவறால் பாரதியார் பெயருக்கு களங்கம். ஒன்று ஊழலை ஒழியுங்கள்; இல்லை நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கி, ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பி.எஸ் பெயரை சூட்டிவிடுங்கள்!' இவ்வாறு ராமதாஸ் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

English summary
Ramadoss talking about Bharathiyar university vice chanceller arrest for bribe scam. He said that avoid corruption otherwise remove the names of the honest leaders and keep names of Jayalalitha. Edappadi and OPS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X