For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: உணவே மருந்து என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்... ஆனால் இன்றோ நாம் உண்ணும் உணவே நமக்கு விஷமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுகளால் நாம் திணிக்கப்படுகிறோம்.

வீட்டிலே சமைத்த காலம் போய் இன்று நம்மில் பலர் உணவு விடுதிகளில் உண்பதையே விரும்புகிறோம். சிக்கனில் புழு, நாய் கறி, நீண்ட ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே பெரும்பாலும் நமக்கு அளிக்கிறது பல்வேறு உணவு விடுதிகள். காசுக்கு காசும் போச்சு.. நம் உடலுக்கும் தீங்கும் வந்தாச்சு.

அப்படியே வீட்டில் சமைத்து சாப்பிடலாம் என்றால்.. மருந்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், கலப்படமே இல்லாத உணவு பொருட்கள் இல்லை என்ற நிலை. ஹார்மோன் மருந்துகளினால் வளர்க்கப்பட்ட கோழி இறைச்சி, அரிசியில் அதிக மருந்து என நம்மை விழி பிதுங்க வைக்கிறது நம் இன்றைய சமுதாயம்.

[ஓவனை திறந்தா "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே!]

அம்மிகள் போன இடம் எங்கே

அம்மிகள் போன இடம் எங்கே

அம்மியில் அரைத்த நாம் இன்று மிக்ஸி , கிரைண்டர் என உபயோகித்து கொண்டிருக்கிறோம்... மண் பண்டங்களை சமைப்பதற்கு பயன்படுத்தாமல் அலுமினியம், நான் ஸ்டிக் (Non - stick ) பயன்படுத்திகிறோம். சோம்பேறிகளாய் நாம் மாறினோம். நம்மிடம் நோய் நொடிகள் வந்து சேர்ந்தன.

குட்டீஸுக்கும் சுகர்

குட்டீஸுக்கும் சுகர்

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி, சிறு வயது முதலே obesity. ஆரோக்கியமற்ற தலைமுறையை உருவாக்கிக் கோண்டிருக்கிறோம் நாம் .
விளம்பரங்களை பார்த்து வாய் பிளந்து ரசாயனம் கலந்த குளிர் பணங்களை அருந்துகிறோம், மைதா பிஸ்கட்டுகள் , சிப்ஸ் வகைகள் நம் உயிருக்கு எமனாய் வருகிறது....

ஆட்டிப்படைக்கும் பாஸ்ட் புட்

ஆட்டிப்படைக்கும் பாஸ்ட் புட்

உடல் நலனிற்காக உணவு அருந்தாமல் , fashion நிற்காக உணவு அருந்துகிறோம். fast food கலாச்சாரம் நம்மை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது . விழித்திடுவோம் நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை அளிப்போம். பாரம்பரிய உணவுகளை நமது வீட்டிலேயே சமைத்து உண்போம். நோய் நொடி அற்ற அடுத்த தலைமுறை வளர முயற்சிப்போம்.

பிஸ்ஸாவும், பர்கரும் பேராபத்து

பிஸ்ஸாவும், பர்கரும் பேராபத்து

நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவகங்கள் மற்றும் பொருட்களை அறவே ஒழிப்போம். நம் முன்னோர்களின் வழியில் இயற்கை முறையில் வாழ்வோம். யாருக்கு வேண்டும் மைதாவில் செய்யும் pizza வும் பர்கர் ரும் , நம் உடலுக்கு நன்மை பயக்கும் கேழ்வரகு,கம்பு போன்ற சிறுதானியங்களை உட்கொள்வோம்.

வளமான நலமான சமுகாம்

வளமான நலமான சமுகாம்

நம் நாளைய சமூகம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கலப்படம் நிறைந்த பொருள்களின் மீது கொண்டுள்ள மோகத்தை நாம் உடைத்து எறிய
வேண்டும். வளமான நலமான நாளைய சமூகம் வளர நாம் இன்று முதல் பாடு படுவோம்.

- லாவண்யா

English summary
Always avoid tinned food and stay healthy, says our reader Lavanya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X