For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க அயிரை மீன் குழம்பை உச்சு கொட்டி சாப்பிடுபவரா... உஷார்... அங்கேயும் பிராய்லரப்பா!

ஆறுகளில் அயிரை மீன் வரத்து குறைந்ததால் தொழிற்சாலைகளில் வளர்க்கப்படும் அயிரை மீன்கள் தலைகாட்ட தொடங்கியுள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்க அயிரை மீன் குழம்பு பிரியரா?..வீடியோ

    திண்டுக்கல்: மதுரை,திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் அயிரை மீன் குழம்பு ரொம்பவே பிரசித்தம்.. சென்னையில் கிளைபரப்பிய மதுரை ஹோட்டல்கள் கூட பஸ்ஸில் அயிரை மீன்களை வரவழைத்து பரிமாறிய காலம் உண்டு.

    அதுவும் ஒருகாலத்தில் சென்னை திருவல்லிக்கேணி சாரதா மெஸ்ஸில் (இப்போது தியாகராய நகருக்கு போய்விட்டது) அயிரை மீன்குழம்பை சாப்பிடாத கரைவேட்டிக்காரர்களே இருந்தது இல்லை.

    ஒரு சின்ன கப்தான்.. அதில் 50,60 குட்டி குட்டி அயிரை மீன்கள் குழம்போடு கிடக்கும்.. அப்படியே சுடுசாப்பாட்டில் பிசைந்து கட்டினா..அப்படி ஒரு ருசி....

    மழை இல்லாமை காரணம்

    மழை இல்லாமை காரணம்

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அயிரை மீன் குழம்பும் கூட அரிதான ஒன்றாகிப் போய்விட்டது. இதற்கு காரணமே மழைதான்.

    சின்ன மீன்

    சின்ன மீன்

    நன்றாக மழைபெய்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கிடைக்கும் இந்த அயிரை மீன்கள். கடல் மீன்களை சுவைத்தோருக்கு சொல்வது என்றால் நெத்திலி மீனில் கால்வாசிதான் இருக்கும் இந்த அயிரை. இப்படியும் வைத்து கொள்ளலாம் அயிரையின் கடல் மீன் வடிவம்தான் நெத்திலி என... சரி இப்ப என்ன பிரச்சனை என்கிறீர்களா?

    ஒரிஜன் இல்லையாமே

    மழை இல்லாமல் போனதால் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அயிட்டங்களில் ஒன்றாகிப் போனது அயிரை மீன் குழம்பு. ஆனால் மதுரை, திண்டுக்கல் மக்களே இந்த ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு கூட ஒரிஜனல் இல்லையாமப்பு...

    பிராய்லர் அயிரை

    பிராய்லர் அயிரை

    கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லை என்பதால் ஒரிஜனல் அயிரை மீன்கள் வரத்து இல்லையாம்... பிராய்லர் கோழிகளைப் போல தொழிற்சாலைகளில் வளர்க்கப்படும் அயிரை மீன்கள் ‘புழக்கம்தான்' இப்ப அதிகமாம்.

    ஒரிஜனல் அயிரை மீன் 1 கிலோ ரூ1,400 வரை கிடைக்குமாம். ஆனால் பிராய்லர் அதாவது வளர்ப்பு அயிரை 1 கிலோ ரூ600தானாம்.. நம்பிக்கையான ஹோட்டலில் ஒரிஜனல் அயிரைதானா என விசாரித்துவிட்டே ஒரு பிடி பிடியுங்க மக்கா!

    நீங்க திண்டுக்கல்காரவுகளா இருந்தா.. அணைப்பட்டி ஆத்துல தண்ணி ஓடுறப்பதான் ஒரிஜனல் அயிரை கிடைக்குமாய்யா!

    English summary
    Now the famous Ayira Fish became as rare in Madurai and Dindigul districts due to the Drought.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X