For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும்.. கிண்டலடிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

முக அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும்- சுப்பிரமணியன் சுவாமி- வீடியோ

    சென்னை: முக அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கிண்டலடித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் அழகிரி இடையேயான மோதல் முற்றியுள்ளது. அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்கும் திட்டத்தில் ஸ்டாலின் இல்லை என தெரிகிறது.

    இதனால் அதிருப்தியடைந்த அழகிரி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்த உள்ளதாக கூறியுள்ளார். தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அழகிரி இந்த பேரணியை நடத்தவுள்ளார்.

    கட்சி தொடங்குவாரா?

    கட்சி தொடங்குவாரா?

    அன்றைய தினம் கட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இட்லி கடைதான் வைக்க முடியும்

    இட்லி கடைதான் வைக்க முடியும்

    இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
    திமுகவில் நுழையவிருக்கும் அழகிரி இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும் என தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் ஸ்டாலின்தான்

    திமுக தலைவர் ஸ்டாலின்தான்

    திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். மு. க அழகிரியால் இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும். தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் பாஜக சென்று கொண்டிருக்கிறது.

    பின்னால் போகக்கூடாது

    பின்னால் போகக்கூடாது

    நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி தத்துவத்தை முன்னிறுத்தினால்தான் பாஜக வெற்றி பெற முடியும். பாஜக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பின்னால் போகாமல் இருக்கவேண்டும் இவ்வாறு சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.

    English summary
    BJP Executive Subramaniyan Samy says Azhagiri can make a idly shop. Stalin is the leader of DMK he said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X