For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம், பெரியார், நேதாஜி, செகுவாராவாக மாறிய 'அழகிரி': பாவம் இந்த தலைவர்கள்- இது மதுரை கூத்து!

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: மு.க. அழகிரியின் பிறந்நதாளையொட்டி மதுரையில் அவரை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்று சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி இன்று தனது 63வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் திமுக எம்.பி.க்களான கே.பி. ராமலிங்கம், நெப்போலியன் மற்றும் ஜே.கே. ரித்தீஷ் அழகிரியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது புகைப்படம் உள்ள பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போன்று அழகிரியை சித்தரித்து அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பேனர் வைத்துள்ளனர். இதை பார்த்த ஒருவர் நல்ல வேளை கலாம் 2 நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்து சென்றுவிட்டார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

செகுவாரா

செகுவாரா

போராளி செகுவாரா போன்று அழகிரியை சித்தரித்து மதுரையில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேதாஜி

நேதாஜி

அழகிரியின் ஆதரவாளர்கள் அவரது முகத்தை நேதாஜியின் புகைப்படத்தில் வைத்து எங்கள் நேதாஜியே என்ற வாசகத்துடன் பேனர் வைத்துள்ளனர்.

கருணாநிதி

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கெட்டப்பில் அழகிரியை போட்டு அதையும் ஒரு பேனராக வைத்துள்ளனர். மதுரையில் திரும்பும் பக்கமெல்லாம் அழகிரியின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

பெரியார்

பெரியார்

பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியார் போன்று அழகிரியை சித்தரித்து மதுரையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் இந்த வித்தியாசமான பேனர்கள் குறித்து தான் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

English summary
Azhagiri is Abdul Kalam, Nethaji, Karunanidhi for his supporters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X