For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுடன் சந்திப்பு! அதிமுகவில் ஐக்கியமானார் அழகிரி ஆதரவு எம்.பி. ஜே.கே. ரித்தீஷ்!

By Mathi
|

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும் அக்கட்சியின் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் இன்று அதிமுகவில் இணைந்தார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ஜே.கே. ரித்தீஷ். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர். திமுகவிலிருந்து மு.க. அழகிரி சஸ்பென்ட் செய்யப்பட்ட போதே அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

Azhagiri loyalist JK Ritheesh to join ADMK

அத்துடன் திமுக தலைமை மீதும் பகிரங்க குற்றச்சாட்டுகளை ரித்தீஷ் முன்வைத்திருந்தார். திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் ஆன பின்னர் திமுக மீதான ரித்திஷீன் விமர்சனம் கடுமையானது.

அத்துடன் கடந்த சில வாரங்களாகவே அவர் அதிமுகவில் சேர்ந்துவிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஜே.கே. ரித்தீஷ் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

திமுகவின் ராமநாதபுரம் மாணவர் அணி துணை அமைப்பாளர் நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரணி முன்னாள் செயலர் செந்துரேசுவரன் ஆகியோரும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

English summary
Dismissed DMK leader M K Alagiri's loyalist and DMK MP JK Ritheesh to join AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X