For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாவோட ஆதரவாளர்களை வேட்டையாடுகிறார் ஸ்டாலின்: அழகிரி மகன் துரை தயாநிதி சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

Azhagiri's son Durai slams Stalin
சென்னை: திமுக தலைவராவதற்காக தமது தந்தையின் ஆதரவாளர்களை வேட்டையாடுகிறார் மு.க. ஸ்டாலின் என்று மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி சாடியுள்ளார்.

திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதை தொடர்ந்து களத்தில் அவரது மகன் துரை தயாநிதியும் குவித்திருக்கிறார். தமது தாத்தாவும் திமுக தலைவருமான கருணாநிதியை பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து வந்தார்.

மேலும் கவுண்டமணி, விஜய்சேதுபதி படங்களைப் போட்டு கருணாநிதியை கலாய்த்துக் கொண்டிருந்தார். அத்துடன் ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இப்படி ஒரு பொய்யான அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் சாடினார் துரை தயாநிதி.

மேலும் மு.க. அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நேற்றே தொடங்கியும் வைத்தார் துரை தயாநிதி. ட்விட்டரில் தமது தந்தை மு.க. அழகிரிக்கு ஆதரவு அளிக்க கோரி வேண்டுகோளும் விடுத்து வருகிறார் அவர்.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துரை தயாநிதி, என்னுடைய அப்பாவின் ஆதரவாளர்களை கண்டு அஞ்சி ஸ்டாலின் அவர்களை நீக்குகிறார். திமுகவின் அடுத்த தலைவராக வேண்டும் என்பதற்காக எனது அப்பாவின் ஆதரவாளர்களை ஸ்டாலின் வேட்டையாடுகிறார்.

என் அப்பா அழகிரி மீது தாத்தா கருணாநிதி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். இருப்பினும் நாங்கள் திமுகவை விட்டு வெளியேற மாட்டோம். லோக்சபா தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்றார்.

English summary
Another generation joined the war of words when Durai Dayanidhi, M K Alagiri's 27-year-old son alleged last evening, "Stalin expels my father's supporters to scare them; To remind then he's the next party chief; he poaches my father's supporters." Mr Durai also said his grandfather was making false allegations against Mr Alagiri, but he too ruled out any move to quit the DMK or spoil its chances in the general elections due by May by fielding rebel candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X