For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்ப இல்லை, 11 வயசுலேயே அரசியலுக்கு வந்துட்டேன்.. அழகிரி அதிரடி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுரை: நான் எனது 11ஆவது வயதில் அரசியலுக்கு வந்துவிட்டேன் என மு.க. அழகிரி தெரிவித்தார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு பிறகு லைம்லைட்டுக்கு வந்துவிட்டார் அவரது மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி.

இவர் தன்னை திமுகவில் மீண்டும் சேர்த்து கொள்ளுமாறு "போராடி" வருகிறார். அனைத்து முயற்சிகளும் தோற்ற நிலையில் அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

தேர்தல் பிரசாரத்தில்

தேர்தல் பிரசாரத்தில்

அப்போது அவர் கூறுகையில் என்னுடைய அரசியல் வாழ்க்கை என்பது எனது 11ஆவது வயதில் தொடங்கியது. தஞ்சை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார் போட்டியிட்டார். அச்சமயம் என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் அங்கு தங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

அதற்காக என் தந்தையின் நண்பர் தங்கமுத்துவின் வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். என் அப்பா அந்த கால கட்டத்தில் எவ்வாறு பணியாற்றினார் என்பதை உடன் இருந்து பார்த்தவர்கள் நாங்கள். இதன் மூலம் தான் எனது அரசியல் வாழ்க்கை உதயமானது.

அரசியல் இல்லை

அரசியல் இல்லை

என்னுடைய தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நான் கடந்த 5-ஆம் தேதி அமைதி பேரணி நடத்தினேன். கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரணியை தலைமை தாங்குமாறு தொண்டர்கள் கேட்டு கொண்டனர்.

உள்நோக்கமா

உள்நோக்கமா

அதனால் அந்த பேரணியை நடத்துவதற்கு நான் ஒப்புக் கொண்டேன். மற்றபடி இந்த பேரணியில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

English summary
MK Azhagiri says that he began his political journey at the age of 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X