அழகிரியுடன் ஸ்டாலின் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி.. ஆதரவாளர் பரபர கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ஸ்டாலினும் அழகிரியும் இணைந்தால் தொண்டர்கள் உற்சாகமாகிவிடுவார்கள் என அழகிரி ஆதரவாளர் இசக்கி முத்து கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களான ஸ்டாலினும் அழகிரியும் எலியும் பூனையுமாக உள்ளனர். பொது இடங்களில் ஸ்டாலின் அழகிரி குறித்து பேசுவதையே தவிர்த்து வருகிறார்.

Azhagiri supporter Essaki muthu writes letter to Stalin

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அழகிரி உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகையை சாக்கடைக்கு வரும் குப்பை என விமர்சித்திருந்தார். மேலும், ஸ்டாலின் திமுகவுக்கு தலைமை ஏற்றதால்தான் கட்சி தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததாக குற்றம்சசாட்டி வருகிறார் அழகிரி.

இந்நிலையில் ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தேர்தல்களில் ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின், அழகிரி இணைந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்றும் இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினும் அழகிரியும் இணைந்தால் தொண்டர்கள் உற்சாகமடைவார்கள் என்றும் அழகிரியின் ஆதரவாளர் இசக்கி முத்து ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Azhagiri supporter Essaki muthu writes letter to Stalin. Essakimuthu urges Stalin and Azhagiri work together.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற