For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலத்தில் களை கட்டிய சீசன்- கவனிப்பாரற்று கிடக்கும் சுற்று சூழல் பூங்கா

Google Oneindia Tamil News

குற்றாலம்; குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பலகோடி மதிப்பில் தொடங்கப்பட்ட சுற்று சூழல் பூங்கா பழுதாகி கிடப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடுந்தர மற்றும் ஏழை மக்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மூலிகை வளம் நிறைந்த அருவிகளில் நீராடுவதற்காகவே சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

Bad condition in Tamil Nadu’s biggest eco-park

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து சுற்றி பார்க்கும் வகையில் சுமார் 33 ஏக்கர் நிலத்தில் இயங்கி வந்த அரசு தோட்டக் கலைத்துறை பண்ணை கடந்த 2010 அப்போதைய திமுக அரசில் ரூ.6 கோடி ஓதுக்கீடு செய்து சுற்று சூழல் பூங்காவாக அமைத்தது.

சுற்றுச்சூழல் பூங்காவில் நீரூற்று, பூங்கா, ரோஜா தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம், ஓவியங்கள், தாடகத்தின் மீது நடந்து செல்லும் வகையில் மரப்பாலம், உணவருந்தும் பகுதி, மலை மீதிருந்து சமவெளியை பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடம், நடை பயிற்சி மேற்கொள்ளும் வசதி என பல வசதிகள் செய்யப்பட்டன.

இது தவிர தோட்டக் கலைத்துறை சார்பில் மா, பலா, மங்குஸ்தான், கொய்யா உள்ளிட்ட பழக்கன்றுகள், மிளகு, பாக்கு, கிராம்பு உள்ளிட்ட இலவங்க செடிகள், குடோரட்டன்கள் விளைவிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Bad condition in Tamil Nadu’s biggest eco-park

இந்தகைய சிறப்பு மிக்க சுறறு சூழல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதை மேம்படுத்த அரசு நிதி ஓதுக்காத காரணத்தால் புணரமைபபு செய்யப்படாமல் புதர் மண்டி வருகிறது. இதில் சிறுவர் சாகச விளையாட்டு உபகாரணம் கிழித்து தொங்குகிறது. உணவருந்தும் கூடத்தில் உள்ள ஹெல்டி சரிந்து கிடக்கிறது.

Bad condition in Tamil Nadu’s biggest eco-park

மரப்பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதில் நடப்பவர்கள் எப்போது உடைந்து விழுமோ என்ற பயத்தில் உள்ளனர். இதனால் பூங்காவை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

English summary
The State's biggest eco-park has come up in a picturesque spot at Courtallam, a popular destination of tourists,down South. Torrist worried Bad condition of adventure-play area, sunken garden, fern garden, royal drive, bamboo avenue, rock garden, children play area, murals, butterfly garden, eco pond and stream walk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X