For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகுபலியை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம்? கடைசி நேர சிக்கலால் பூனைகுட்டி வெளியே வந்தது!

பாகுபலி திரைப்படத்தை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: பாகுபலி திரைப்படத்தை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம் என கூறப்படுகிறது. பாகுபலி திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட கடைசிநேர சிக்கலில்தான் இந்த உண்மையே வெளியே வந்தது.

தமிழக முன்னாள் முதல்வரின் குடும்பமே பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்திருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. அவரது குடும்பத்தின் பெரும்பாலான முதலீடுகள் தென்மாவட்டத்தில்தான் இருந்து வருகின்றன.

டெல்லிக்கு நெருக்கம்

டெல்லிக்கு நெருக்கம்

கடந்த சில மாதங்களாக டெல்லியுடன் படுநெருக்கமாக இருந்து வருகிறது மாஜி முதல்வர் வகையறாக்கள். கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் மாஜி முதல்வர் தரப்பு 'பெரும்' மகிழ்ச்சியுடனே இருந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தை புதியதாக ஒரு நிறுவனம் திடீரென வாங்கியது. இப்படம் தமிழகத்தில் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

பணச் சிக்கல்

பணச் சிக்கல்

பெருந்தொகையான பணத்தை வங்கியில் உடனே செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டிருந்தது. அப்போது இந்த சிக்கலுக்கு தீர்வு காண, இந்த நிறுவனமே மாஜி முதல்வருக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்பட்டது.

பரபரப்பு

பரபரப்பு

அடடே இப்படி ஒரு விஷயமும் இருக்கிறதா? என நினைத்துக் கொண்ட 'மேலிடம்' நிதி சிக்கலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாம். இப்போது பிரமிக்க வைக்கும் வகையில் அடுத்தடுத்து 10 புதிய படங்களை பெரும் தொகைக்கு வாங்கி வருகிறதாம் கே புரடொக்சன்ஸ். இந்த விவகாரம் இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
Sources said that Bahupali Film's TN Distributor is Benami of TamilNadu former Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X