For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை ஏகடியம் விஜயகாந்தை நோக்கி எதற்கு?... பரபரப்பைக் கிளப்பிய பாலகுமாரன்!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து எழுத்தாளர் பாலகுமாரன் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட கருத்துக்கு ஆதரவாக பலரும், எதிர்த்துப் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

விஜயகாந்த்தை ஏன் இவ்வளவு கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் பாலகுமாரன். இதுதொடர்பாக மார்ச் 30ம் தேதி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

Balakumaran's pro VIjayakanth stand creates debate

அந்தப் போஸ்ட் இதுதான்...

இத்தனை ஏகடியம் விஜயகாந்தை நோக்கி எதற்கு? அத்தனையும் பயம்.
உங்கள் கேலி பதிவுகள் அவர் மீது ஒரு கவனத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்துகின்றன.. அவர் தன் பிராசாரத்தை ஆரம்பிக்கவேயில்லை. உங்க எதிர்ப்புகளால் அவர் ஆதரவு பிராசரத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.
இன்னார்தான் முதல்வராக தகுதி உள்ளவர் என்று யாரால் சொல்ல இயலும். எட்டி உதைத்தும் கிள்ளியும் மேலே விழுந்தும் புரட்சி தலைவர்
இறுதிஊர்வலத்தில் ஜெயல்லிதாவை அரசியலாளர்கள் படுத்தியபாடு...உலகம் அறியுமே சிங்காசனம் ஏறினாரே. எவர் சூழ்ச்சி தடுக்க முடிந்தது. பத்திரிகைகள் அவருக்கு எதிராக இருந்தன. எல்லாம் ஒடிந்து போயிற்று.
அளவுக்கு மீறிய கேலி உங்கள் ஆத்திரத்தைக் காட்டும். ஆத்திரக்கார்ரை மக்கள் மதிப்பதில்லை.
கோபம் வேறு ஆத்திரம் வேறு.
வைகோ பாலிமரை மறுத்து வெளியேறியது கோபம். உங்ககூட மனுஷன் பேசுவானா என்கிற வெளிப்பாடு.
நான் கூட்டணி ஆதரவாளர் இல்லை . பொது ஜனம். என்னைப்போல் பலர் இருக்கக்கூடும். கவனம்.

இந்த போஸ்ட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாக்கவும் பலரும் கருத்திட்டு வருகின்றனர். அதில் பலர் பாலகுமாரன் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், விஜயகாந்த் போன்றவர்களை எப்படி பாலகுமாரன் ஆதரிக்கலாம் என்றும் கேட்டும் அவரது பக்கத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

Balakumaran's pro VIjayakanth stand creates debate

இதற்கு பாலகுமாரன் பதிலளித்துள்ளார். அதில்,

நான் தெளிவாகத்தானே பேசுகிறேன்.
நான் கேப்டன் கூட்டணி பிரசாரகன் இல்லை. அவருக்கு வாக்களிக்கும்படி எவரையும் கேட்கவில்லை.இந்த காட்டடி அடிக்கிறீகளே... ஏன் எனக்கேடகிறேன்.
அவர் வெற்றி தோல்வி பற்றி அவருக்கு பெரிய அலட்டல்கள் இருக்காது என நம்புகிறேன். அவரின் இன்றைய இந்த வளர்ச்சியே உன் னதமானது. முதியவர்கள் வந்து கெஞ்சும் ஆகிருதியே வியப்பானது.
தர்மத்திற்கு உட்பட்டு தாக்குங்கள் என்றூ கூறியுள்ளார் பாலகுமாரன்.

English summary
Noted writer Balakumaran's pro VIjayakanth post in his FB has created debate in the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X