For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக கொதிக்கும் வலைஞர்கள்: திரிஷா, ஏமி ஜாக்சனுக்கு எதிராக கொந்தளிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், முட்டுக்கட்டைக்கு முதன்மை காரணமாக விளங்கும் பீட்டா அமைப்புக்கு எதிராக இணையத்தில் தமிழ்ப் பதிவர்கள் கொந்தளிப்பாக பதிவுகளை இட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பீட்டா அமைப்பின் நல்லெண்ணத் தூதர்களான நடிகைகள் த்ரிஷாவுக்கும் ஏமி ஜாக்சனுக்கும் எதிராக டுவிட்டரில் கருத்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பில் இருக்கிறார் நடிகை எமி ஜாக்சன். அதனால், ‘ஜல்லிக்கட்டு'வை நடத்தவிடக்கூடாது என்று நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டையில் நடிகை எமிஜாக்சன் கையெழுத்திட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவர் டிவிட்டரில் பதிவு ஒன்றையும் போட்டிருந்தார்.

இதனையடுத்து ஏமி ஜாக்சனுக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக, எமி ஜாக்சன் நடித்துள்ள கெத்து திரைப்படம் நாளை வெளிவர உள்ளது. எமி அங்கம் வகிக்கும் பீட்டா அமைப்பினால் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கெத்துப் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதை நிறுத்துங்க நாங்க நிறுத்தறோம்

நாய் கண்காட்சி, குதிரை பந்தையம் நடத்தும் போது நாங்க ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதா என்கின்றனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள். குதிரை பந்தயத்தையும் நாய் கண்காட்சியும் தடை செய்" நாங்க ஆங்கில ஊடகத்திலும் திருப்பி அடிப்போம் என்று பதிவிட்டுள்ளனர்.

கையெழுத்திட்ட ஏமி ஜாக்சன்

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதும் விலங்குகள் நலன் சார்ந்த அமைப்பான 'பீட்டா', கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியது. அந்த கையெழுத்து இயக்கத்தில் வித்யா பாலன், பிபாஷா பாசு உள்ளிட்ட நடிகர்கள், விராட் கோலி முதலான கிரிக்கெட் நட்சத்திரங்கள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். அந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றதுடன், அதன் இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்க பிரபலங்களுக்கு ஏமி ஜாக்சன் அழைப்பு விடுத்திருந்தார்.

டிரெண்ட் ஆன ஜல்லிக்கட்டு

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தவுடன், சமூக வலைத்தளத்தில் "I SUPPORT JALLIKATTU" என்ற வாக்கியம் ட்ரெண்ட் ஆனது. இது தொடர்பான ஹேஷ்டேக் மூலம் ஏமி ஜாக்சனுக்கு எதிரான பதிவுகளும் டுவிட்டரில் கொட்டப்பட்டு வருகிறது.

கொதிக்கும் வலைஞர்கள்

இந்த நேரத்தில் எமி ஜாக்சன் நடிக்கும் கெத்து படம் வெளியாவதால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கோபம் கெத்து படத்தின் மீது திரும்ப வாய்ப்புள்ளது. எமி ஜாக்சன் நடித்த கெத்து படத்தை புறக்கணிக்கப்போவதாகவும், தமிழகத்தில் கெத்து படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். இதனால் கெத்து படம் திரையிடப்படும் தியேட்டர்களின் மீது கல்லடி விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

மாட்டுக்கறி ஏமி ஜாக்சன்

அத்துடன், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகும் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.இதே பிரச்சினையில் நடிகை த்ரிஷாவுக்கும் சிக்கியுள்ளார். பீட்டா அமைப்பு குறித்த பதிவுகளை அவ்வப்போது த்ரிஷா வெளியிட்டு வருவதாலும், அந்த அமைப்பைப் பிரபலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாலும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

திரிஷாவிற்கு எதிரான பதிவுகள்

நடிகை திரிஷா பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக பலமுறை கருத்து கூறியுள்ளார். இதனால் திரிஷா நடித்துள்ள அரண்மனை 2 படத்திற்கும் சிக்கல் உருவாகியுள்ளது.

English summary
After animal rights activists successfully torpedoed Jallikattu for this year, by obtaining a stay on holding of the bull taming sport in Tamil Nadu, its supporters have begun to question the elitist stance of the urban educated and affluent sections of the society that remains silent on horse racing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X