For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக போட்டியின்றி தேர்வானார் பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி அம்மாள்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாளின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர் ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த அவரது மகன் ப.செந்தில்குமார் தனது மனவை வாபஸ் பெற்றார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதியும் தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 24 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரீசலனை செய்யப்பட்டது.

தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்! தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்!

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரபலங்கள் போட்டியிட்டால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குள்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

மாற்று வேட்பாளராக அவரது மகன் ப செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் லட்சுமி அம்மாள் போட்டியிட முடியாத சூழல் எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாறியதால் லட்சுமி போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.

போட்டியின்றி தேர்வு

போட்டியின்றி தேர்வு

அவரது மனு நேற்றைய தினம் ஏற்கப்பட்டது. இதையடுத்து மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த செந்தில்குமார் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி 3ஆவது முறையாக ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே அவர் இருமுறை போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வேட்புமனு தாக்கல்

மீண்டும் வேட்புமனு தாக்கல்

முன்னதாக கடந்த 16 ஆம்தேதி சொத்து மதிப்பை வேட்புமனுவில் பூர்த்தி செய்யும் போது 23.54 கோடி என்பதற்கு பதிலாக 253.54 கோடி என தவறுதலாக பூர்த்தி செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து 250 கோடி சொத்து என்ற விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலானது. பின்னர் 20-ஆம் தேதி சரியான மதிப்புகளை பூர்த்தி செய்து மீண்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார் லட்சுமி.

English summary
Bangaru Adigalar's wife Lakshmi Ammal won in Melmaruvathur Panchayat President election without contesting in election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X