For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு: வங்கி ஊழியர் சங்கம் பாய்ச்சல்

கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு மீது வங்கி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வங்கி ஊழியர்கள் சங்கம் கடுமையாக சாடியுள்ளது.

சென்னையில் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன் நிர்வாகி சி.பி. கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Bank employees union slams Centre on Currency Ban

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்பட போவதே இல்லை. ரூ400 கோடிக்கு கள்ள நோட்டு இருக்கிறது. இதற்காக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என அறிவித்திருப்பது சரியான நடவடிக்கையே அல்ல.

கருப்புப் பணம் எங்கேயெல்லாம் புழங்குகிறது என்பது குறித்து மத்திய அரசு கவலைப்படவே இல்லை. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய பணத்தை மீட்பதீல் கூட மத்திய அரசு அக்கறையும் காட்டவில்லை.

இவ்வாறு கிருஷ்ணன் சாடினார்.

English summary
All India Bank employees union leaders slammed the Centre on Currency ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X