For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்அவுட் கலாச்சாரத்தை ஆரம்பித்ததே திமுகதான்.. மறக்கமுடியுமா? தமிழிசை சரமாரி சாடல்!

தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரம் ஆரம்பித்ததே திமுக ஆட்சி வந்தப் பிறகுதான் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரம் ஆரம்பித்ததே திமுக ஆட்சி வந்தப் பிறகுதான் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தில் ரகுபதி என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரிதான் விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹு கில்டு ரகு?

ஹு கில்டு ரகு?

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சாலையில் விபத்து நடந்து இடத்தில் ஹு கில்டு ரகு என்று எழுதி வைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு விழாவில் வரவேற்பு வளைவுகள் மற்றும் பேனர்கள் வைக்க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்

திமுக வந்தப்பிறகுதான்

இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ளார். அதாவது தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரம் ஆரம்பமே திமுக ஆட்சி வந்தபிறகுதான் என தெரிவத்துள்ளார். மேலும் அதனை மறக்க முடியுமா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட வரலாறு புரியும்

மேலும் 1975ஆண்டுகளில் திமுக நடத்திய கோவை மாநாட்டு புகைப்படங்களை தேடிப்படித்தால் திமுகவில் இருந்துதான் கட்அவுட் கலாச்சாரம் பிறந்த திராவிட வரலாறு புரியும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai slams DMK for codemns decortative curves for govt function. Tamilisai says Banner culture started in Tamil nadu after DMK come to ruling in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X