For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் பதவியேற்பு.. நாளை சென்னை வருகை!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்க இருக்கும் பன்வாரிலால் புரோகித் நாளை சென்னை வர இருக்கிறார். வெள்ளிக்கிழமை ராஜ்பவனில் பதவி ஏற்பார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் சென்ற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து மத்தியில் ஆளும் பாஜக அரசால் வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவின் முழு நேர ஆளுநராகவும் , தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டுவந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.

 Banwarilal Purohit will start his work from friday.... All set for Inauguration.

வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்த பொது தமிழகத்தில் அடுத்தடுத்து பல அரசியல் மாற்றங்களும், குழப்பங்களும் நிலவி வந்தது.இதையடுத்து முழுநேர ஆளுநரை நியமிக்க மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் கூட தொடுக்கப்பட்டன. இதையடுத்து சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக அறிவித்தார்.இவர் மூன்று முறை எம்.பி யாக இருந்துள்ளார்.மேலும் அசாம் , மேகாலயா மாநில கவர்னராகவும் இருந்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடக்க இருக்கும் நடக்கும் விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

English summary
Assam's former governor Banwarilal Purohit has been appointed as the tamilnadu's full time governor. He is going to start his work from friday. All set for inauguration function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X