For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு சேம நல நிதி அறிவிப்பு

தமிழகத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு சேம நல நிதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு சேம நல நிதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய பார் கவுன்சிலின் இணைத்தலைவர் பிரபாகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் வேலை பார்க்கும் வழக்கறிஞர்களின் நலனுக்காக பல்வேறு உதவித் தொகைகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டது. தற்போது மருத்து செலவு செய்து கொண்டு இருக்கும் வழக்கறிஞர்கள் தொடங்கி மரணமடைந்த வழக்கறிஞர்களின் குடும்பம் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Bar council announced welfare fund for lawyers

அதன்படி தமிழகத்தில் உயிரிழந்த 470 வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.1.73 கோடி வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் உடல் நலம் குன்றி வெவ்வேறு மருத்துவமனையில் வழக்கறிஞர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த உடல்நலம் குன்றிய 38 வழக்கறிஞர்களுக்கு மருத்துவ செலவுக்காக 3000 - 5000 ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அகில இந்திய பார் கவுன்சில் இணைத்தலைவர் பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Bar council announced welfare fund for lawyers. Tamilnadu lawyers will get 3000-5000 welfare fund as the medical allowance. Nearly 38 lawyers will get benefit from this scheme. 470 late lawyer family will get 1.73 crore rupee from bar council. All India Bar Council co-head Prabhakaran announced this fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X