For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயி வீட்டுக்குள் புகுந்து பலாப்பழம் சாப்பிட்ட கரடி.. ஒரு சுளையைக் கூட விடவில்லை!

Google Oneindia Tamil News

Bear infiltrate into farmer's house and eats jack fruit!
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் புகுந்த கரடி பலாப்பழத்தை சாப்பிட்டதால் அந்த பகுதியில் பீதி கிளம்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தலையணை மலை அடிவாரத்தில் உள்ளது சிவபுரம். இங்கு அதிக அளவில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் இருப்பதால் சிறுத்தை கரடி, யானை, புலி போன்ற வன விலங்குகள் அடிக்கடி சிவபுரத்திற்குள் புகுந்த விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்த ஊரை சேர்ந்தவர் விவசாயி தங்கபாண்டி. இவர் இரவு புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக வீட்டை திறந்து வைத்து வி்ட்டு திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வந்த கரடி சிவபுரம் கிராமத்தி்ற்குள் புகுந்து இரை தேடி அலைந்தது. பின்னர் திறந்து கிடந்த தங்கபாண்டி வீட்டுக்குள் புகுந்தது. அங்கு அறைக்குள் இருந்த பலாப்பழத்தை பார்த்த கரடி அங்கு தரையில் அமர்ந்து அதை உரித்து சாப்பிட தொடங்கியுள்ளது.

திடீரென வீட்டுக்குள் உருமல் சத்தம் கேட்டதால் திடுக்கீட்டு விழுந்த தங்கபாண்டி வீட்டுகள் கரடி உட்கார்ந்து இருப்பதை பார்த்து அலறவை கண் விழிந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அவற்றை விரட்டி அடித்தனர். நம்மளை விட முரட்டுத்தனமாக இருக்கிறார்களே என்று மிரண்ட கரடி வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியை நோக்கி ஓடியது.

பலாப்பழத்தில் ஒரு சுளையைக் மீதம் வைக்காமல் அனைத்தையும் தின்று விட்டதாக விவசாயி தங்கபாண்டி புலம்பினார். இதுகுறிதது களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தங்கபாண்டியின் வீட்டை பார்த்தனர். பின்பு அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அதில் கரடியின் கால் தடங்கள், எச்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரடி மேலும் அங்கேயே பதுக்கி இருக்கிறதா என்று அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகி்ன்றனர். இதனால் பொதுமக்கள் பீதியில் உறைத்து காணப்படுகின்றனர்.

English summary
A Bear infiltrated into a farmer's house near Kalakkadu and ate jack fruit kept in the house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X