சட்டசபையில் அத்தனை அமளி நடந்தும் அதிமுக ஏன் வாய் பொத்தி இருந்துச்சு தெரியுமா?
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம், வாய் பொத்தியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி, கீழராஜகுலராமன் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சாத்தூர் எம்.எல். ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய எதிர்கோட்டை சுப்பிரமணியன் , நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வன்முறையில் ஈடுபட முயலும் என்று சசிகலா முன்கூட்டியே எங்களிடம் கூறினார். ஆனால் நாம் அதை பொருட்படுத்தாமல் கைக்கட்டி , வாய்பொத்தி, அமைதியாக இருந்து நமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்என்று சசிகலா எங்களிடம் தெரிவித்தார்.
திமுகவின் ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட்டபோதும் கூட, சசிகலா கூறிய ஒரே காரணத்திற்காக மட்டுமே நாங்கள் 3 மணி நேரம் அமைதியாக கைக்கட்டி, வாய்பொத்தி சட்டசபையில் அமர்ந்து இருந்தோம்.
இதனால் தான் தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்திட்டோம். மேலும் சசிகலா , தொகுதிகளில் உள்ள மக்கள் குறைகளை கேட்டு அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று எம்.எல்.ஏக்களை அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி நாங்களும் தொகுதி மக்களின் தேவைகள் கேட்டறிந்துவருகிறோம் என்று எதிர்கோட்டை சுப்பிரமணியன் கூறினார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications