For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாராயணசாமி வீட்டு முன்பு "பிச்சை" எடுக்கக் கிளம்பிய 200 பேர் கைது

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 200 பேர் முதல்வர் நாராயணசாமி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் குதிக்கக் கிளம்பினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

Begging protest held in front of Narayanasamy's house
பொதுப் பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில் மீண்டும் பணி வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக இன்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டு முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக சுதேசி மில் அருகில் இருந்து இன்று காலை ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு போராட்டக்குழு உறுப்பினர் தெய்வீகன் தலைமை தாங்கினார். ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

English summary
A Begging protest was held in front of Puducherry CM Narayanasamy's house and police arrested 200 persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X