For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BREAKING NEWS: பாரத் பந்த்.. டெல்லி டூ கன்னியாகுமரி.. லட்சக்கணக்கானோர் போராட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுக்க இன்று திங்கள்கிழமை முழு அடைப்பு நடக்கிறது. டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

Newest First Oldest First
4:38 PM, 10 Sep

பாரத் பந்த் நிறைவு பெற்றது

காங்கிரஸ் அழைப்பின் பேரில் நடந்த பந்த் நிறைவு பெற்றது

மாலை 3.30 மணிக்கு மேல் கடைகள், பேருந்துகள் செயல்பட துவங்கியது

பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது

11:43 AM, 10 Sep

மக்கள் பிரச்சனையில் மோடி அமைதியாக இருக்கிறார் -ராகுல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி மோடி பேசவில்லை -ராகுல்

விவசாயிகளின் கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை -ராகுல்

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து வாய் திறக்கவில்லை -ராகுல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது -ராகுல்

11:43 AM, 10 Sep

வார்த்தை தவறிவிட்டார் பிரதமர் மோடி -ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சு

10:58 AM, 10 Sep

சென்னையில் 2 இடங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

அண்ணா சாலையில் 2 இடங்களில் போராட்டம்

பாரத் பந்த் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

முத்தரசன் உள்ளிட்டோர் கைது

10:18 AM, 10 Sep

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணி

சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

ஆம் ஆத்மி கட்சியினரும் பேரணியில் பங்கேற்பு

தற்போது ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கிறது

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை பேரணி

இடதுசாரி அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டுள்ளது

9:55 AM, 10 Sep

நீீலகிரி மாவட்டத்தில் பந்த்துக்கு முழு ஆதரவு என தகவல்

கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்

கூடலூர், பந்தலூரில் கடைகள் முழுமையாக அடைப்பு

9:54 AM, 10 Sep

பாரத் பந்த்: புதுச்சேரியில் பஸ்கள் ஓடவில்லை

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கடைகளும் முழுமையாக அடைப்பு

புதுச்சேரியில் பாரத் பந்த் கிட்டத்தட்ட முழுமை

9:32 AM, 10 Sep

முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் கர்நாடகா எல்லையில் நிறுத்தம்

தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகளும் நிறுத்தம்

9:27 AM, 10 Sep

டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி

ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஆயிரக்கணக்கானோர் நடைபயணம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பேரணியில் முழக்கம்

இந்தியா முழுக்க தீவிரமடைகிறது கண்டன ஆர்ப்பாட்டம்

9:25 AM, 10 Sep

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைப்பு
8:44 AM, 10 Sep

பந்த் நடத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் தான் - தமிழிசை

நாட்டில் பந்த் நடத்த எந்த உரிமையும் எதிர்கட்சிளுக்கு இல்லை - தமிழிசை

8:33 AM, 10 Sep

20க்கும் அதிகமான கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது

மெரினா உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குவிப்பு

அண்ணா சாலையிலும் போலீஸ் குவிப்பு

காலை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

8:32 AM, 10 Sep

சென்னை முழுக்க போலீஸ் குவிப்பு

முழு அடைப்பை தொடர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ள நிலையில் போலீஸ் குவிப்பு

7:58 AM, 10 Sep

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்வு

முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது

டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91 ஆகும்

டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98 ஆகும்

7:56 AM, 10 Sep

இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரை அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

7:51 AM, 10 Sep

சென்னையில் உள்ள அரசு பஸ் டிப்போக்கள் முன்பு போலீஸ் குவிப்பு

சென்னையில் 25,000 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தம்

7:42 AM, 10 Sep

தமிழகம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என வெள்ளையன் தகவல்

நாலரை லட்சம் லாரிகளும் இயக்கப்படாமல் நிறுத்தப்படும்

7:31 AM, 10 Sep

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த்துக்கு ஆதரவு

தேமுதிக, கமல்ஹாசன் கட்சியின் நிலைப்பாடு தெரியவில்லை

7:20 AM, 10 Sep

தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடும் என அறிவிப்பு

அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க அரசு உத்தரவு

6:09 AM, 10 Sep

பெட்ரோலிய பொருள் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த்

காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ள பந்த்துக்கு நாடு முழுக்க ஆதரவு

பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்பு

தமிழகத்தில் ஆட்டோ, மணல் லாரிகள் இயங்காது

தமிழகத்தில் பாரத் பந்த்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

காலை 9 மணிக்கு பந்த் தொடங்கி மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது

English summary
The All India Congress Committee has called for a nationwide bandh on Monday (September 10) to protest against 'price rise', 'fall' of rupee against the dollar and other issues that 'affect' the people across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X